மிதிவண்டி
என் பெயர் மிதிவண்டி என்பதாலே என்னை காலை வீசி மிதிக்கிறாய் நீ!
நாகரிகமான என் பெயர் சைக்கிள்!
நான் உனைக் கோபிக்காமல் சந்தோஷமாய் சுமக்கிறேன்!
நீ என்னை வளைத்தாலும் நெளித்தாலும் நீ செல்லும் பாதைக்கு சாரதி நீயே!
என்னை உதைத்தாலும் வாழ்வில் முன்னேற்றம் உனக்கே!
எனக்கு பெட்ரோல் டீசல்போட வேண்டாம்!
காப்புரிமையும் இல்லை..தலைக்கவசமும் தேவையில்லை!
பின்னாலுள்ள இருக்கையிலே
பிள்ளையும் அமர்ந்து கொள்ளலாம்!
ஊரெங்கும் சுற்றலாம்!
உல்லாசமாய் உலா வரலாம்!
என் முதுகில் ஏறி அமர்ந்து மணி அடித்து மக்கள் ஒதுங்க ராஜா போல் பவனி வரலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக