பாடும் நிலா பாலு..


மறக்க முடியாத மாமனிதர்!

எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடல்களின்  பரமரசிகை நான்.

நாங்கள் 1965முதல் சென்னையில் சூளைமேடு பகுதியில் குடியிருந்தோம்.

நான்படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் அவரது உறவினர்வீடு இருந்தது. அந்த வீட்டுப்பெண்ணைதான் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொன்னார்கள். அவர் அடிக்கடி அங்குவருவார். இயற்கை எனும் இளையகன்னி, ஆயிரம் நிலவேவா,  மேலும் சில தெலுங்குப் பாடல்களும் பாடுவார். மிக ஸிம்பிளாக இருப்பார். அவர் தெருவில் செல்லும்போது மிக எளிமையாக நடந்துசெல்வார்.  அவரது கணீரென்ற குரலுக்கு எவரும் மயங்காதிருக்க முடியாது. அவர் செல்லும்போது நானும் என்தோழிகளும்

...இதோ போறாரே அவர்தான் அடிமைப்பெண்ணில் ஆயிரம் நிலவேவா பாடிருக்கார்...என்று பேசிக் கொள்வோம். அவர் இவ்வளவு பெரிய பிரபலமாவார் என்று தெரிந்திருந்தால் அன்றே அவருடன் பேசியிருக்கலாமே என்றஏக்கம் எனக்கு இன்றும் உண்டு. அவர் மறைந்தபோது மிக வருத்தமாக இருந்தது.நானும் என் மகனும் இணைந்து ஒரு திரைப்பாடல் நிகழ்ச்சியில் S.P.B.பாடிய 'அந்திமழை பொழிகிறது' பாட்டைப்பாடியது மறக்க முடியாதது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு