மனிதநேயம்(100 வரிக்கதை)


அந்த ஆலய வாசலில் எப்போதும் பிச்சைக்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். அன்று ஒருவிசேஷம் என்பதால் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. ராஜு தன்மனைவி அருணா  மகள்அட்சயாவுடன் கோவிலுக்கு வந்தான். அங்கு ஒரு குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருபெண்ணைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பார்க்க நன்றாக இருந்தாள். அருணா அவளுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு அவள் ஏன் பிச்சை எடுக்கிறாள் என்று கேட்டபோது, தான் நல்ல குடும்பத்தில் பிறந்து ஒரு பையனிடம் காதல் கொண்டு ஏமாந்துவிட்டதாகவும், திரும்ப பிறந்தவீடு செல்ல மனமில்லை என்றும், ஏதாவது வேலை கொடுத்தால் செய்வதாகவும் சொன்னது அருணாவிற்கு பாவமாக இருந்தது. அருணா ராஜுவிடம் ...இவளை அழைத்துச் சென்று வேலைக்கு வைத்துக் கொள்ளவா?..என்றாள். சற்று யோசித்தவன்,அதனால் ஏதாவது பின்விளைவுகள் வந்தால் என்னசெய்வது என யோசித்தான். அவளோ, 'என்னால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது.எனக்குஒரு பாதுகாப்பு வேண்டும்'என்று அழுதாள். ராஜுவின் மனிதநேயம் வென்றுவிட, இன்று அவள் மகள் நந்தினி அட்சயாவுக்கு நல்லதோழி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு