வெட்கம்
ஒரு பெண் முதல் பருவம் அடையும்போதும்...
தன் கணவனின் கையை முதல் முறை தொடும்போதும்...
கணவன் அவளைக் கட்டியணைத்து முத்தமிடும்போதும்..
எந்த வயதிலும் கணவன் 'நீ அழகாய் இருக்கிறாய்' என்று ரசிக்கும்போதும்...
கணவனுடன் கைகள் பிணையும்போதும்..
இருவர் இதழும்
இணைந்திடும் போதும்..
வரும் வெட்கத்தின் அழகே தனி!
*******
உன்னைக் கண்டதும்
காதலிலும் மோகத்திலும்
உன் அணைப்பை முத்தத்தை விரும்பும் ஆசையிலும்
சட்டென்று வருகிறதே ஒரு
முகம் மலர்ந்து தலைகுனியும்
ஒரு வித்யாச உணர்வு..
அதன் பெயர்தான் வெட்கமோ!?
கருத்துகள்
கருத்துரையிடுக