6.தம்பதிகள் மகிழ்ச்சிக்கு!(100வரி)
கணவன்மனைவிக்குள் சண்டையே வரக்கூடாது. அது எப்படிமுடியும்னு கேக்கறீங்களா? முயற்சித்தால் முடியாததுஎது?!
கணவருக்கும் மனைவிக்கும் அடுத்தவருக்கு பிடித்தது என்னென்ன பிடிக்காதவை என்னென்ன என்பது நன்றாகவேதெரியும்.
கணவன் மனைவிக்கு பிடித்தவற்றை மட்டும் செய்ய வேண்டும்! மனைவியும் கணவனுக்கு பிடித்தவற்றை மட்டும் செய்ய வேண்டும்! நல்ல ஐடியாதானே!!
பிடித்தவற்றை செய்கிறீர்களோ இல்லையோ, ஆனால்நிச்சயம் பிடிக்காதவற்றை செய்யவே கூடாது! இது நடப்பது எளிதானதல்ல என்பதேஉண்மை!!
உங்களுக்கு உண்மையில் உங்கள் கணவன் அல்லது மனைவியோடு ஒற்றுமையாக வாழவேண்டும் என்று நினைத்தால் அதற்காக கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும்!
தாங்கள் எதுவும் விட்டுக் கொடுக்காமல் தன் துணைமட்டும் எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பேராசைப்படுவது தவறுதானே? கொஞ்சம் விட்டுக்கொடுத்து மட்டும் வாழப் பழகுங்கள்! வாழ்க்கை சொர்க்கமாகிப் போகும்!
அவர்களை விட அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்கமுடியாது. எப்படிப் பட்ட துன்பங்கள் அவர்கள் வாழ்க்கையில் வந்தாலும் இருவருமாக அவற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும்!
எந்த நிலையிலும் அவர்களால் சந்தோஷமாக வாழமுடியும்! அன்றுதான் கல்யாணம் ஆனவர்கள்போல் அன்னியோன்யமாக சந்தோஷமாக வாழ முடியும்!!
கருத்துகள்
கருத்துரையிடுக