5.பாசம் மறைவதில்லை!(100வரிகதை)



சலீம்பாயும் சங்கரபாண்டியனும் அந்தக் காலனியில் முப்பது வருடங்களாக மிகஒற்றுமையாக  அடுத்தடுத்த வீட்டில் வாழும் நல்லநண்பர்கள். அவர்கள்குழந்தைகள் ஜாகீரும்,நித்யாவும் ஒன்றாகப்படித்தவர்கள். 


அவர்கள் நண்பர்கள் மட்டுமே என்றெண்ணியிருந்த சங்கர பாண்டியனுக்கு அவர்கள்தம் காதலைத் தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்தார். 

ஜாதிப்பற்று அவரைக் கொதிப்படையவைக்க காதலை எதிர்த்தார்.


சலீமிற்கு நித்யா நல்லபெண் படிப்பு என்பதோடு ஆரம்பமுதலே அவருக்கும் அவர்மனைவிக்கும் இதில் இஷ்டமிருந்ததால், நித்யாவும் ஜாகீரும் உறுதியாகஇருக்க இருவருக்கும் திருமணம்நடந்தது. 


சங்கரபாண்டி அந்தவீட்டை விற்றுவிட்டு  சென்றபோது தன்மகளிடம்...இனி தனக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை. தம் சொத்தில் பங்கு கிடையாது...எனஎழுதி கையெழுத்துபத்திரம் வாங்கிக் கொண்டார். பதினைந்து 

ஆண்டுகளாக நித்யாவும் ஜாகீரும் இரண்டு குழந்தைகள்பிறந்து சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தனர். 


சிலநாட்களுக்கு முன் உலகைஉலுக்கும் கொரோனாவில் இறுதிநிலையில் இருந்த சங்கரபாண்டி...நித்யாவை பாக்கணும். நான் அவளை மன்னிச்சுட்டேன்...என்று ஆஸ்பத்திரியில் கதற, டாக்டர்கள் அவர் மனைவியிடம் சொல்ல, நித்யா அலறி அடித்து ஓடிவந்து ICUவுக்கு வெளியிலிருந்து அப்பாவைப் பார்த்துக்கதறினாள். ஒருநிமிடம் அவளை உற்றுப் பார்த்த சங்கரபாண்டியன் உயிர் நிம்மதியாகப் பிரிந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

அப்பா உங்களுக்காக...