4.இதுவும் கடந்து போகும்!(100வரி)
வெற்றிகள் கிடைக்கும் போது 'இதுவும் கடந்து போகும்' என்பதை நினைவில் கொண்டால்கர்வம் தலை தூக்காது.
தோல்விஅடையும்போது 'இதுவும் கடந்து போகும்' என்பதை நினைவில் கொண்டால் சோர்வு வராது!
நல்ல நண்பர்கள் நம் உங்கள் வாழ்க்கையில் வரும் போது 'இதுவும் கடந்து போகும்' என்பதை நினைவில் கொண்டால் அவர்கள் விலகும் போது பாதிப்பு இருக்காது!
நம்மைப் பிடிக்காதவர் நம் வாழ்வில் குறுக்கிட்டால் 'இதுவும் கடந்து போகும்' என்பதை நினைத்துக் கொண்டால் மனஅமைதியை இழக்காமல் இருக்கலாம்! .
கவலை, வருத்தம் ஏற்பட்டு நெற்றி சுருங்கும் போதெல்லாம் 'இவையும் கடந்து போகும்' என்பதை நினைவில் கொள்வோம்.
முகத்தில் புன்னகை தவழ்வதை உணர்வீர்கள்!
இன்றைய கொரோனா எப்பொழுது சரியாகி உலகம் பழைய நிலையடையும் என்றகவலையும், அவநம்பிக்கையும் வரும்போதெல்லாம் 'இதுவும் கடந்து போகும்' என்ற தாரக மந்திரத்தை சொல்லிக் கொண்டால் மனதில் புத்துணர்ச்சியும் தெம்பும் உண்டாவதை உணரலாம்!
விரைவில் கொரோனா காணாமல் போகும் என்ற நம்பிக்கை நமக்கு ஆறுதலைத்தரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக