2.சிறப்பு100வார்த்தை...
2.அதிகாலை இளவெயில்..
பெண் ஜன்மம்
அதிகாலை பொழுது புலர்ந்துவிட்டது. வெயிலும் வந்து விட்டது. ஜானகிக்கு களைப்பு கண் திறக்க முடியவில்லை. கால் முட்டிகளில் விண் விண்ணென்று வலி.
தாயின் வயிற்றில் உதைத்துக் கொண்டிருந்தபோதே தோன்றிய வலியோ? தத்தித் தடுமாறி நடை பயின்றபோது வந்த வலியோ? மணமானபின் புகுந்த வீட்டார் ஒவ்வொரு
வருக்கும் ஓடிஓடி வேலை செய்த வலியோ? பிள்ளை
களை வயிற்றிலும் பின் இடுப்பிலும் சுமந்ததால் வந்த வலியோ? வாழ்க்கையில் பல நேரங்களில் என்னையே சுற்றி வந்த அத்தனை குடும்பத்தா
ருக்காகவும் நேரம் காலம் பாராமல் உழைத்ததால் வந்த வலியோ?
இன்னும் சற்று நேரம் தூங்கு என்று உடம்பு ஆணையிட... எழுந்து வந்த மகனின் குரல் ஓங்கி ஒலித்தது...அம்மா. இன்னுமா தூக்கம்? நான் இன்று சீக்கிரம் அலுவலகம் கிளம்பணும்.
டிஃபன் ரெடி பண்ணு...
...சே என்ன பெண் ஜன்மம்...என அலுத்துக் கொண்டே எழுந்தாள் ஜானகி.
கருத்துகள்
கருத்துரையிடுக