2.நன்றி சொல்கிறேன் நான்🙏(100வரி)
எனது அகம்பாவத்தை
நீக்கி எனக்குப்பணிவைத்
தந்த என்கஷ்டங்களுக்கு
நன்றி 🙏
என்னைத் தன்எதிரியாய்ப் பார்த்து இன்னல் கொடுத்தவர்களிடமிருந்து விலகவைத்த வைராக்யத்திற்குநன்றி🙏
எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின்வலியை எனக்கு உணரவைத்த நோய்களுக்கு
மனதாரநன்றி🙏
எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை சொல்லிக்கொடுத்த உடலுக்குமனமார்ந்தநன்றி🙏
என்னை சிந்திக்கவைத்த
என்பிரச்சனைகளுக்கு
மிக்கநன்றி !
மனிதவாழ்க்கை நிலையில்
லாதது என்பதை எனக்குத்
புரியவைத்த மரணத்திற்கு
மனதாரநன்றி !
என் பெற்றோரின்
பெருமையை, என்மனதில் அழுத்தமாய் பதியச்செய்த
அனாதை இல்லங்களுக்கு
மனதாரநன்றி !
ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குப் புரியவைத்த மழலைகளுக்கு நன்றி🙏
பணத்தால் மட்டுமே எல்லாம் பெறலாம் என்றெண்ணி நிம்மதியிழந்த செல்வந்தர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏
பக்தி வெளிவேஷமல்ல என்று புரியவைத்த வேஷதாரிகளுக்கு நன்றிநன்றி🙏
நாமஜபத்தின் அற்புத மஹிமையை எனக்குச் சரியாகப் புரியவைத்து என்பாபங்கள் நீங்கக் காரணமான என்குருவுக்கு பல்லாயிரம் நன்றிகள்🙏
பக்தி ஒன்றே உன்னை இறைவனிடம் நெருங்க வைக்கும் என்பதை உணர்த்திய என் இஷ்டதெய்வத்திற்கு நன்றிகள்பலப்பல🙏
கருத்துகள்
கருத்துரையிடுக