சிறப்பு100வார்த்தைகதை..
3. பை நிறைய மாம்பழங்கள்
மாம்பழமாம் மாம்பழம்!
மாம்பழ சீசன் வந்து விட்டால் எங்களுக்கு ஒரே சந்தோஷம்தான். எங்கள் சாமு சித்தப்பா திருமணமாகும்வரை எங்களுடன்தான் இருந்தார். அவருடைய இளம் வயது நண்பர் ஒருவருக்கு சொந்தமாக மாம்பழத் தோட்டம் இருந்தது. அதனால் அவரிடம் சொல்லி இரண்டு நாளைக்கு ஒருமுறை ஐந்து கிலோ அளவுக்கு பைநிறைய மாம்பழம் வாங்கி வருவார். நாங்கள் மாம்பழத்தை நறுக்கி சாப்பிட்டதே இல்லை. முழுதாகத்தான் சாப்பிடுவோம்.
அம்மா மாம்பழத்தில் பாயசம் ஜாம் ஜூஸ் எல்லாம் செய்வார்.
சித்தப்பாவுக்கு திருமணமான
பின் வருவது குறைந்து விட்டது. இப்பொழுதெல்லாம் ஏதோ 4,5 மாம்பழங்கள் மட்டுமே வாங்கி வருவார். அதன்பின் வருவதே நின்றுவிட்டது. பின்பு வேறு ஊருக்கு மாறிச் சென்று விட்டார். அதனால் பை நிறைய மாம்பழமும் நின்று விட்டது! இப்போது அவர் வயது எண்பது. இன்றும் மாம்பழத்தைப் பார்க்கும்போது சாமு சித்தப்பாவின் நினைவும் அவர் வாங்கிக் கொடுத்த மாம்பழங்களின் சுவையும் நினைவில் வரும்!
கருத்துகள்
கருத்துரையிடுக