சிறப்பு100வார்த்தைகதை..
1. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் பாட்டி வீட்டுக்குச் செல்லும் போது..
கற்பகம் அழுகிறாள்..
கற்பகம் சென்னையில் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். பக்கத்தில் மதுராந்தகத்தில் பாட்டி வீடு. அவள் முதல் பேத்தி என்பதால் பாட்டிக்கு மிகவும் செல்லம். விதவிதமாய் சாப்பாடு, பட்சணங்கள் செய்து தருவாள். தான் பிறந்து வளர்ந்த கதையெல்லாம் சொல்வாள். கோவிலுக்கு அழைத்துச் செல்வாள். பல்லாங்குழி தாயம் ஆடுபுலி ஆட்டம் எல்லாம் ஆட சொல்லித் தருவாள். பொழுது போவதே தெரியாது.
அங்கு லீவுக்கு வரும் மாமா குழந்தைகளோடு ஆடுவதும் பாடுவதும் ஊர்சுற்றுவதும் புதிய படம் பார்க்கப் போவதுமாக ஜாலியாகப் பொழுது போகும். ஆறு மாதம் முன்பு பாட்டி திடீரென்று நெஞ்சுவலியால் இறந்து விட்டார். இன்னும் ஒரு வாரத்தில் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. பாட்டி வீடு இனி கனவில் மட்டும்தானோ? துக்கம் தாங்க முடியாமல் விசித்து அழுகிறாள் கற்பகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக