1. வாழ்க்கை இவ்வளவே!(100வரி)
1. வாழ்க்கை இவ்வளவே!
ஒரு இல்லத்தரசிமுன் பத்துநிமிடங்கள் உட்கார்ந்து பார்த்தால் வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை உணரலாம்!
வியாபாரிகளுக்குமுன் பத்து நிமிடங்கள் உட்கார்ந்து பாருங்கள்.. நம் வருவாய் மிகக்குறைவு என்று உணர்வீர்கள்!
ஆன்மிககுருக்களுக்கு முன் பத்துநிமிடம் அமர்ந்து பார்த்தால் ஒருதொண்டு நிறுவனத்திற்கு நம் பொருளை வழங்கும் உணர்வு ஏற்படும்!
ஒரு தலைவருக்குமுன் பத்துநிமிடங்கள் உட்கார்ந்து கவனித்தால் உங்கள் ஆய்வுகள் அனைத்தும் பயனற்றவை என்பதை உணர்வீர்கள்!
ஒரு ஆசிரியருக்குமுன் பத்துநிமிடங்கள் உட்கார்ந்து கவனித்தால் நாம் மீண்டும் ஒரு மாணவராக மாற விரும்புவோம்!
ஒரு விவசாயிக்குமுன் பத்துநிமிடங்கள் உட்கார்ந்து பார்த்தால் நாம் போதுமான அளவு உழைக்கவில்லை என்பதை உணர்வோம்!
விஞ்ஞானிகளுக்கு முன் பத்துநிமிடங்கள் உட்கார்ந்து பார்த்தால் நம் சொந்த அறியாமையின் மகத்துவத்தை உணர்வோம்!
ஒரு சிப்பாய்க்கு முன் பத்துநிமிடங்கள் உட்கார்ந்து கவனித்தால் நம் சொந்த சேவைகளும், தியாகங்களும் ஏதுமற்றவை என்று உணர்வோம்!
ஒருகுடிகாரனுக்கு முன் பத்துநிமிடங்கள் உட்கார்ந்து பாருங்கள்..வாழ்க்கை எவ்வளவு சுலபமானது என்று உணர்வோம்!!
கருத்துகள்
கருத்துரையிடுக