தாய்மை





அன்புக் கணவனே! 

நீ எத்தனையோ பரிசுகள் கொடுத்தும் கிடைக்காத மகிழ்ச்சியை இந்தத் தாய்மை என்ற பரிசில் பெற்றேன்!

நம் இரு உயிரும் இணைந்த இந்தப் பரிசுக்கு ஈடேது!

******

மூன்று எழுத்தில் ஒரு கவிதை எழுதச்  சொன்னால் நான் எழுதுவேன் தாய்மை என்று!அதனை வர்ணிக்க வார்த்தை ஏது?தாய்மைக்கு இலக்கணம் ஏட்டில் ஏது? பாட்டில் ஏது?அவள் அன்பில் இயல்பாய் தானே வந்தது அன்றோ!

*******

'அம்மா' என்ற என் மகளி(னி)ன் குரல் தொலைபேசியில் கேட்டவுடன் என் மனமும் உடலும் சிலிர்த்துப் போகும் தருணம் நான் உணர்கிறேன் தாய்மையின் பெருமையை! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு