இனிமை..இனிமை!
கொஞ்சி விளையாடும்
பிஞ்சுக் குழந்தையின்
வஞ்சமில்லா சிரிப்பு
அத்தனை இனிமை!
தோட்டத்தில் பூத்த வண்ண
மலர்களைவட்டமிடும்
வண்டுகளின் ரீங்காரம்
ரசிக்க இனிமை!
பேருந்து பயணத்தில்
நம்முடன் இணைந்து
நடையிடும் மரங்கள்
மனம் மயக்கும் இனிமை!
ஈரைந்து மாதங்கள் சுமந்து
பெற்ற மழலையின் முகத்தை
முதலில் பார்த்த அந்த நொடி
மெய்சிலிர்க்கும் இனிமை!
சின்ன வயதில் சிரித்து
விளையாடிய சிங்காரப்
பொழுதுகள் எண்ணும்போதே
மகிழ்ச்சி பெருக்கும் இனிமை!
கருத்துகள்
கருத்துரையிடுக