என்னருமைக் கண்ணாளா!
என்னுயிரே! என் அன்பே! என்னருமைக் கண்ணாளா!
எனைக் காணும் போதெல்லாம் உன் கண்களில் ஆசை
பொங்குகிறதே!
உனை நெருங்கும் போதெல்லாம் என்மனம் துள்ளாடல் போடுகிறதே!
என் அருகில் வரும்போதெல்லாம் உன் விரல்கள் என்னைத் தீண்டுகிறதே!
உன்னோடு இணைந்து உரசி நடக்கையிலே என் உள்ளம் உவகையாகுதே!
உன் கண் பார்வையில் மயங்கி
கிறங்கித்தான் போனேனே!
உன் சிரிக்கும் விழிகளில் என் சிந்தையும் மயங்குதே!
மயக்கும் புன்சிரிப்பில் மதி மயங்கிப் போனேனே!
அன்பான உன் அணைப்பில் என் கோபமும் மறந்துபோனதே!
உனை மணந்த அன்று முதல் இன்றுவரை குறையாமல் அதிகரிக்கும்
இந்தக் காதல் இருபதில் இல்லை என் மன்மத ராஜாவே!
எழுபதில் வந்த நம் இதயங்கள் கலந்த இனிய காதல்!
கருத்துகள்
கருத்துரையிடுக