ரயில் பயணங்களில்..(100வரி)



ரயில் பயணங்களை நான் மிகவும் ரசிப்பேன். முன்பெல்லாம் ரயிலில் மட்டுமே பயணம் செய்வோம். ஆகாய விமான பிரயாணங்கள் நினைத்து பார்க்கவே முடியாது! நாங்கள் கோலாப்பூரில் இருந்தபோது, நேரடியாக சென்னைக்கு ரயில் கிடையாது. மீரஜிலிருந்துதான்  ரயிலில் சென்னை வரவேண்டும். அங்கு இரவு 12.40க்கு ரயில். முன்பதிவு செய்த டிக்கெட்டில் அடுத்தநாள் தேதி இருந்தது. 12 மணிக்கு பின் அடுத்த நாள் தேதிதானே இருக்கும்.நாங்கள் அதிலிருந்த தேதியன்று ரயிலில் ஏறி எங்கள் இருக்கைக்கு சென்றபோது, அதில் இருந்தவர் தன் டிக்கட்டை காட்டி இருக்கை தன்னுடையது என்றார். டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டபோது...உங்க ரயில் நேற்றே போய்விட்டது. இதில் 12 மணிக்கு மேல் அடுத்த நாள் தேதி வரும்...என்றபோது எங்கள் முகத்தில் டன்டன்னாக வழிந்த அசடைப் பார்க்கணுமே! பின் முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கு பணம் செலுத்தி பயணம் செய்தோம்! அதன்பிறகு மிகவும் கவனமாகவே டிக்கெட் முன்பதிவு செய்வோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு