தாய்மை
அன்புள்ள அம்மா🙏
தொப்புள் கொடியோடு நம்உறவுக் கொடியையும்உருவாக்கிய என்தாயே!
உன் கருவறையில்
நான்கனமாய்
இருந்தும்
சுமையாய் எண்ணாமல்
சுகமாய் அனுபவித்தவளே!
நான்வெளியுலகை
தரிசித்தபோது
நீ ஆனந்தத்தின்
உச்சம் அடைந்தாய்!!
என் அழுகை சத்தம்
உன் காதுகளில் கேட்குமுன்னே
அயராது எழுந்தோடி வந்து
அணைத்து என்னை
உச்சிமுகர்ந்துஅமுதான பாலூட்டிய உன்அன்பை இனிஎப்போது உணர்வேன்!
சின்னநோய் வந்தாலும்
சிலநொடி கூட கண்மூடாது
என்னைக் கைகளில் ஏந்தித்
தாலாட்டி சீராட்டி பாராட்டிய
உனக்குநிகர் வேறுயார்?
உன்நகலாய் எனைமாற்றி
என்நிழலாய் என்னுள் இருப்பவள்!
என் நல்லதோழி நீ;
உயர்ந்த உறவு நீ!
ஊக்கம் தந்து யாவும்
கற்பித்த ஆசிரியை நீ!
அன்பு அக்கறை அரவணைப்பு
பாசம் நேசம் தியாகம்
அனைத்தும் கொண்ட
என்தெய்வமே!
என்றும் என்னுடன் நிரந்தரமாய்
இருப்பாயென்று இறுமாந்திருந்தேனே!
அத்தனையும் பொய்யாகியதே!
நீ எங்கிருந்தாலும் எனைக்
கண்போல் பாதுகாப்பாய்
என்ற நம்பிக்கையே
என்றும் என் பலம்!
கருத்துகள்
கருத்துரையிடுக