இமை

 





நீ என்னைப் பெண் பார்த்து சென்ற அன்று..

நான் ஒரு நொடியும்இமை மூடித் தூங்கவில்லை..

உன் உருவம் கண்ணிலிருந்து மறை(ற)ந்து விடுமென்று!



என்னை நீ கட்டி அணைக்கும்போதும்

முத்தமிடும்போதும்

இமைகளை அழுந்த மூடிக் கொள்கிறேன் காதலினால்!



இமை மூடி உறங்கி விட்டானென்று நான் 

எழுந்து செல்ல..

அம்மா என் பக்கத்தில் படுத்துக்கொள்

என்கிறான் தன் 

இமைகளை முழுதும் 

திறந்து என் செல்லமகன்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு