தேடல்
இளமையில் பணத்தைத் தேடி ஓடும் நாம்..
முதுமையில் தேடுவது மன அமைதியையும் நிம்மதியையும்!
வாழ்க்கை முழுதும் தேடல் முடிவதே இல்லை!
******
எல்லோரும் எப்போதும்
எதையோ ஒன்றை
எங்கும் தேடுகிறோம்!
இழப்பினால் வரும் தேடல்..
தேவையினாலும் வரும் தேடல்..
வாழ்க்கை முழுதுமே
தேடல்..
இறைவனை அறிய முயல்வது ஆன்மிகத் தேடல்...
மண்ணைத் தேடியபோது
கிடைத்தது வைரம்..
கடலில் தேடினோம்
கிடைத்தது முத்து..
அரசியல்வாதிகளிடம் தேடுவது
ஓழுக்கத்தை..
தேர்தலில் தேடுவது நியாயத்தை...
மனிதனிடம் தேடுவது
மனித நேயத்தை!
கருத்துகள்
கருத்துரையிடுக