எந்தன் தாய்மை எந்தன் வழி'

 


எந்தன் தாய்மை எந்தன் வழி' என்று நீங்கள் இருப்பது போல் உங்கள் அம்மாவால் இருக்க முடிந்ததா?


அம்மாவின் எண்ணம்..

அம்மா..அவள் தனக்காக இன்றி தன்னைச் சுற்றி உள்ள மக்களுக்கே முதல் உரிமை கொடுத்து அவர்களுக்கு வேண்டியதை செய்து அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணி தன்னை கூண்டுக் கிளியாக மாற்றிக் கொண்ட ஒரு சாதாரண குடும்பத் தலைவி. அங்கு அவள் ஆசைகள் எண்ணங்களை விட மற்றவர்கள் தன்னைப் பற்றி தவறாக எண்ணக் கூடாது என்று வாழ்ந்தவர்.

எந்தன் தாய்மை எந்தன் வழி என்பதில் எந்தன் தாய்மை என் வலி மட்டுமே..மற்றதெல்லாம் உறவுக்காகவும் ஊருக்காகவும் என்று வாழ்ந்ததாக எனக்குத் தோன்றும்.சில நேரங்களில் என் அப்பா சரியாக சொல்வதைக் கூட ஒப்புக் கொள்ளாமல் அடம் பிடிப்பார்.

நான் சின்னவளாய் இருந்தபோது என் பக்கத்து வீட்டிலிருந்த பெண்கள், பையன்களோடு தாயக்கட்டை பல்லாங்குழி நொண்டி என்றெல்லாம் விளையா
டுவேன். எனக்கு பனிரெண்டு வயதானதுமே என் அம்மா பையன்களுடன் விளையாட அனுமதிக்கவில்லை. எனக்கு அந்த வயதில் ஏனென்று புரியவில்லை. ஆனாலும் அம்மா சொல்வது சரியாக இருக்குமென்று ஒதுங்கி விட்டேன்.

என் பெண் பிள்ளைகள் co-educationல் படித்ததால் என் வீட்டுக்கு அவர்கள் நண்பர்கள் வந்து ஆண் பெண் வித்யாசமின்றி பழகுவார்கள். என் அம்மா...என்னடி இது இப்படி எல்லாரும் ஒன்றாக பழகுகிறார்களே. நீ சொல்ல மாட்டியா...என்பார். நான் சொல்வேன்...அம்மா அது அந்தக் காலம். இப்பல்லாம் எல்லாரும் சகஜமாகப் பழகுவார்கள். ஆண் பெண் என்றாலே காதல் கல்யாணம் என்று கற்பனை பண்ணிக் கொள்ளாதே...என்பேன். ஆனாலும் அம்மா மாறவில்லை.

என் சகோதரன் ஒருவன் எங்கள் ஜாதியிலேயே வேறு ஒரு பிரிவு பெண்ணைக் காதலித்தபோது அவளைக் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார். நானும் என் கணவரும் எடுத்துச் சொல்லி திருமணத்தை முடித்து வைத்தோம்.

...ஏன்மா இப்படி தடுக்கிறாய்? அவனுக்கு பிடித்தவளுடன் வாழ அவனுக்கு ஆசை உரிமை இல்லையா...என்றால் தன்னை தங்கள் குடும்பத்தார் இதைப் பற்றி சொல்லி பரிகசிப்பார்கள், தான் பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லை என்பார்கள் என்று சொல்லி அழுவார்.
...நீ ஏன் மற்றவர்களுக்காக வாழ்கிறாய்? அவன் என் பிள்ளை. அவனுக்கு பிடித்தவளை மணக்க நான் விரும்புகிறேன். நீங்கள் தலையிட வேண்டாம்...என்று சொல் என்பேன்.

என் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் நானும் திருமணத்திற்கு பார்க்கலாமா என்று அவர்களைக் கேட்டேன். என் மூன்று குழந்தைகள் காதல் திருமணம் செய்தவர்கள். இரண்டு மருமகள்கள் வெளிநாட்டுப் பெண்கள். மாப்பிள்ளை மகாராஷ்டிராவை சேர்ந்தவர்.

என்னிடமே சிலர் கேட்டதுண்டு, 'வெளிநாட்டில் வேலை செய்யும் பையனெல்லாம் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்யவில்லையா? நீ அதெல்லாம் கூடாது என்று தடுக்க வேண்டாமா? உற்றார் உறவினர் பரிகசிப்பார்கள்' என்று.

நானும் என் கணவரும் அப்படி யோசிக்கவில்லை. நான் சொல்வேன்,' என் குழந்தைகள் நன்கு படித்து அறிவுள்ளவர்கள். தவறு செய்ய மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். குழந்தைகளுக்கு அவர்களுக்கான உரிமையைத் தருவதில் தவறென்ன?' என்பேன். அவர்கள் ஆசையை மறுத்து வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்து நாளை அவர்களுக்குள் பிடிக்காமல் போனால் நமக்குதானே மனவருத்தம் ஏற்படும்.

என் மருமகள்கள் நன்கு படித்தவர்கள். எங்களிடம் மிக அருமையாக மரியாதையாக இஎண்ணம்..ருப்பார்கள். நம் குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் நமக்கு சந்தோஷம்தானே?

இப்பொழுது என்னைப் பார்க்கும் நண்பர்கள், உறவினர்கள் யாரும் என்னைக் குறைவாகப் பேசுவதில்லை. என்னைப் போல் என் குழந்தைகள் சரியான முடிவெடுப்பார்கள். அதற்கு ஆதரவாக இருப்பதே என் தாய்மையின் வழி என்று இருந்ததால் இன்று எனக்கான வழியில் நான் செயல்பட முடிகிறது.

இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து வித்யாசமாக யோசிக்க வைத்த மாம்ஸ்
ப்ரஸ்ஸோவிற்கு நன்றி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு