வலிமை






கடலில் அலைகள் அவ்வப்போது எழும்..அடங்கும்..

நம் வாழ்விலும் இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும்போது அதை எதிர்த்து செல்லும் மனவலிமை வேண்டும்.

நிலத்தை விளைவித்து அறுவடை செய்ய விவசாயிக்கு தேவை உடல் வலிமை!

விளைச்சல் பொய்த்தாலோ தாங்க வேண்டும் மனவலிமை!

உழைப்போருக்கு உழைத்திட வேண்டும் உடல் வலிமை!

பற்றாக்குறையுடன் குடும்பம் நடத்த தேவை மனவலிமை!

தாய்நாட்டைப் பாதுகாக்க ராணுவவீரருக்கு தேவை உடல்வலிமை!

இயற்கை இடர்களைத் தாங்க தேவை மனவலிமை!

இல்லம் சிறக்க கணவர் பிள்ளைகளைப் பேண மனைவிக்கு தேவை உடல் வலிமை!

இன்பதுன்பம் தாங்கிட வேண்டும் மனவலிமை!

உடலும் மனமும் சீராக இருந்தால் அங்கே என்றும் உண்டு வலிமை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு