முகம் மலர்ந்தது
உன்நினைவில் சிறகடிக்கும் என் மகிழ்ச்சி!
நீ போகுமிடம் தேடி பயணிக்கும் என் மனம்!
நீயே அழகிய கவிதை ஆனாய் என் சிந்தையில்!
பேச நினைத்த வார்த்தைகள்
என் நெஞ்சோடு!
நீ எனைக் கண்டு ரசித்தால் படபடக்கும் என் விழிகள்!
இசையாகும் உன் பேச்சு
என் உள்ளத்தில்!
உன் நினைவால் கலைகிறது
என் உறக்கம்!
முகம் மலர்ந்தது நீ என்னை அணைத்த நொடியில்!
கருத்துகள்
கருத்துரையிடுக