மரியாதை
குழந்தை முதல் முதியோர்வரை அனைவரும் விரும்புவது மரியாதை!
நற்குணங்களில் முலிடம் பெறுவது தனிமனித மரியாதை..
ஆன்மிகப் பெரியோர்க்கு அனைவரும் தருவது முதல் மரியாதை..
நம்மை மதிக்காதவர் இடத்துக்கு போவது மரியாதை அல்ல!
தம்பதிகளுக்குள் மரியாதை விட்டுக் கொடுத்து வாழ்வது..
குழந்தைகளிடம் மரியாதை பாசத்தால் வருவது..
ஆசிரியர்களிடம் மரியாதை சிறந்த கல்வியால் வருவது..
பெரியவர்களிடம் மரியாதை அனுபவத்தால் வருவது..
நற்குணங்களில் சிறந்தவர்க்கு கிடைக்கும் தனிமரியாதை..
நாட்டை ஆள்பவர்க்கு கிடைக்கும் ராஜமரியாதை..
நமக்குள் நாமே வளர்த்துக் கொள்வது சுயமரியாதை..
நண்பர்களுக்குள் நாளும் வளர்வது நயமான மரியாதை..
நம்மிடம் இரப்பவர்க்கும் நாம் தர வேண்டியது சமமரியாதை..
வாயால் சொல்வதை விட மனதால் தர வேண்டும் மரியாதை..
மறைந்த பின்னும் நாம் பெறுவது இறுதி மரியாதை..
நாட்டைக் காக்கும் வீரர்க்கு கிடைப்பது அரசு மரியாதை..
நம்மை மதிக்காதவர் இடத்துக்கு போவது மரியாதை அல்ல!
மரியாதை தவறும்போது நாம் அனைத்தையும் இழந்து விலக்கப் படுகிறோம்!
கருத்துகள்
கருத்துரையிடுக