இரு துருவங்கள்..(சிறுகதை)

உற்சாகம்..அமைதி

சிறு வயது முதலே உற்சாகத்தின் மறுபெயர் ராஜி.வீட்டில் படபடவென்று ஏதாவது பேசுவதும், சிரிப்பதுமாக ஒரு வண்ணாத்திப் பூச்சி போல வளைய வருவாள்! எல்லாவற்றையும் உல்லாசமாக அனுபவிக்க ஆசை அதிகம்! விதவிதமாய் உடுக்கவும் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கவும் வெளியில் சென்று சாப்பிடவும் அலாதி ஆசை! 

ராஜியின் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள். யாரையாவது காதலித்தால் தம் குடும்பகௌரவம் பாதிக்குமென்பதால்   இளங்கலை வாணிபப் படிப்பை  வீட்டிலிருந்தே மாலைக் கல்லூரியில் படிக்க வைத்தனர். கல்லூரிக்குச் சென்று சந்தோஷமாக படிக்க  ஆசைப் பட்டவள் வருத்தத்துடன் பெற்றோர் ஆசைக்கு உடன்பட்டாள். 

அவளை வேலைக்கு அனுப்ப விரும்பாத பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தபோது மறுக்க முடியவில்லை. கணவனாக வந்த அரவிந்த் உற்சாகம் என்றால் எதுவென்றே தெரியாத அமைதி.


ராஜி பத்து வார்த்தை பேசினால் ஒரு வார்த்தைக்கு மேல் பதில் வராது. இவரை படிப்படியாக உற்சாக மனிதராக மாற்ற வேண்டும்  என்ற  வைராக்யத்துடன் தானும் அமைதியானாள் ராஜி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு