சவாலை ஏற்றுக்கொள்
மூடநம்பிக்கை
பெண்
உரிமை
வலிமை
பாரபட்சம்
ஊக்கம்
சமத்துவம்
அதிகாரம்
தடைகள்
பெண்மை
1.அதிகாரம்
கோபமாய்ப் பேசி கடுமையாய் நடந்து கொள்ளாமல் அன்பாய்க் கூறி ஆக்கபூர்வமாய் எதையும் நடத்திக் கொள்வதே பெண்ணின் அதிகாரம்..பெண்ணதிகாரம்!
2.தடைகள்
தடைகள் எத்தனை வரினும்
படைகள் எதற்கு பெண்ணே!
மடை திறந்த வெள்ளமாய்..வீறு
நடை போட்டு வெற்றி கொள்!
3.பெண்
பெண் அவள் ஆணுக்கு நிகரானவள்!
அனைத்திலும் வெற்றி காண்பவள்!
மரபுகள் பேண்வதில் மகத்தானவள்!
திட்டங்கள் செய்வதில்
திறமை பெற்றவள்!
பாரினில் அவளே
பாரதியின் புதுமைப்பெண்!
4.வலிமை
வலிமை உடையபெண்களுக்கு
பொறுமையே சிறந்த ஆயுதம்!
விழும்போதே பெண்ணை எழ வைப்பது அவள் மன வலிமை!
இன்பமும் துன்பமும் மாறிமாறி
வரும்போது துவளாமல் எழவைப்பது அவள் மனவலிமை!
5.ஊக்கம்
பெண் அவளே தாயாய்..
தாரமாய் தமக்கையாய்..
துன்பம் தாங்கும் பேதையாய்..
ஊக்கம் தருவாள் உற்சாகமாய்!
ஏக்கம் பலவும் இருப்பினும்..
தூக்கம் தவிர்த்து உழைப்பாள்..
தேக்கம் இல்லா கடமைகளில்..
ஆக்கம் தருவது அவள்குணம்!6
6.மூடநம்பிக்கை
பெண்களை துன்பப் படுத்துவதும், துயரப் படுத்துவதும், உரிமைகளை மறுப்பதும், பிள்ளைகள் பெறுவது மட்டுமே அவள் கடமை என்பதும் அந்நாளில் மூடநம்பிக்கையாக இருந்தது. இன்று அவளே பட்டங்கள் ஆள்வது முதல் ஆகாய விமானம் செலுத்துவதுவரை சர்வமும் ஆணுக்கு நிகராக செய்வதே இன்றைய மகளிர் பெருமை!7
7.சமத்துவம்
ஆணும் பெண்ணும் சரிசமம்..
அவளும் பெருவாள் சமத்துவம்!
கல்வியில் இல்லை பாகுபாடு..
பெண்ணுக்கு கல்வி எதற்கு என்பது கூப்பாடு!
உடையிலும் கட்டுப்பாடு.. செய்யும் உத்யோகத்திலும் வேறுபாடு!
பணியிடங்களில் பெண் படும்பாடு..
அடிப்படை உரிமைக்கும் தட்டுப்பாடு!
பெண்ணுக்கு வேண்டாம் பெண்ணுரிமை..
என்றைக்கும் தேவை சமத்துவ உரிமை..!
8.பாரபட்சம்
பாரபட்சம் பார்க்காமல் குடும்ப பாரம் சுமப்பதில் பெண் ஒரு சுமைதாங்கி!
தனக்கு வலித்தாலும் அடுத்தவர் துன்பம் நீக்குவதில்
அன்புத் தாய்!
தம் ஆளுமையை வெளிக் காட்டாது எவரையும் தாங்கும் தெய்வத் திருமகள்!
9.உரிமை
பெண்ணுக்குத் தேவை அனைத்திலும் உரிமை..
தன் இயல்பு மாறாமல் வாழ வேண்டியது கடமை..
பெண்ணின் வலிமை அவளின் தகைமை..
அழகு அறிவு கறுப்பு சிவப்பு இவற்றில் இல்லை பெருமை..
தாய்மையும் தூய்மையும்
தியாகமுமே பெண் உரிமை!
10.பெண்மை
பெண்மை என்பது பெண்ணின் அடையாளம் ......
எந்நிலையிலும் தன்னிலை மாறாதிருப்பதே பெண்மை..
தூய மனமும் நேய நினைவும் கொண்டதே பெண்மை..
விவேகம் வினயம் பரிபூரணம் இவையே பெண்மை..
பெண்ணின் சிறப்பான அடையாளமே பெண்மை..
பெற்றவர் உற்றவர் கணவர் பிள்ளைகளை சார்ந்து நிற்பதே பெண்மை..
மரபுவழி நடப்பதே பெண்மை..
பேரறிஞரும் ஆன்மிகப் பெரியோரும் போற்றியது பெண்மை..
பெண்மை வாழ்க..பெண்மை வளர்க!
கருத்துகள்
கருத்துரையிடுக