என் வீடு..7.2.'21

என் வீடு எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு உண்டு... 

அழகான திண்ணை அணிவகுத்து நிற்கும் தூண்கள்..

கால் வீசி நடக்க விசாலமான அறைகள்..

விதவிதமாய் சமைக்க விருப்பமானசமையலறை..

தெய்விகம் நிறைந்த மனதை ஒருமுகப் படுத்தும் சுவாமி அறை..

வீட்டைச் சுற்றிலும் அழகிய பசுமைத்தோட்டம்..

அக்கம் பக்கம் இரண்டிரண்டு தென்னை மரங்கள்..

அங்கங்கே அழகிய பூக்களைத் தரும் மலர் மரங்கள்..

இரவில் நிலவை ரசித்து மகிழ மேன் மாடமுள்ள மாடி.. 

கண்ணுக்கெட்டும் தூரத்தில் காவேரித்தாயின் சலசல சத்தம்..

ஆடும் மயிலும் கூவும் குயிலும் அருகருகே நடந்துவர..

காணி நிலம் வேண்டுமென்று பாரதி போல் கேட்டேன்..

இயற்கையை நேசித்து இனிய தென்றலை சுவாசித்து.. 

இனிவரும் நாட்களை இனிதே கழிக்க இறைவனின் பரிசோ இவ்வழகிய வீடு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

அப்பா உங்களுக்காக...