அருவி(4.3.'21)


 

#இன்றைய தலைப்பு
அருவி

அருவி என்றால் நினைவில் வருவாய் அழகு கொஞ்சும் குற்றாலக் கவினருவி!
பள்ளத்தாக்குகளில் துள்ளித் திரியும் பாங்கான கட்டழகி!
சலசலவென சாகசம் காட்டி சிலிர்ப்பாக கீழிறங்கும் சித்திரப்பூ அருவி!
இதமான கவிதை பாடி சுதியோடும் ஜதியோடும் பாடிவரும் பண்ணருவி!
பசுமை மரமும் பாடும் குயிலும்
பாங்காய் காணும் பாட்டருவி!
பரிதி ஒளியிலும் பறவையின் பண்ணிலும் நிலவின் குளிர்விலும் எழில் காட்டும்
வெண்ணருவி!
குருவியும் குரங்கும் மரமும் மானும் மனங்குளிர குதித்தோட மயக்கும்
மாறா வண்ண அருவி!
குளிர்ச்சியும் மலர்ச்சியும் கொண்டு குளிப்பவரை குதூகலிக்கச் செய்யும் குஷியான பேரருவி!குதித்தோடும் நெளிந்தோடும் கும்மாளமிடும் குளிரருவி!
கோடை வந்தால் ஓய்வெடுக்க காணாமல் போய்விடும் குற்றாலநாதரின் அடிபணியும் பொன்னருவி!
அதுவே சாரல் நிறை தேனருவி பாலருவி சிற்றருவி ஐந்தருவி
அத்தனையும் அழகு நிறை தமிழகத்தின் தலையருவி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு