#சூடான தேநீர்(28.2.'21)
தேநீர் நேரங்கள்!
அயற்சி அறவே மறைந்து முயற்சி முனைவு பெற
உள்ளத்தை சிலிர்ப்பாக்கும்
அதிகாலை நாம் சுவைக்கும் சூடான தேநீர்!
காலையில் தருமே உற்சாகம்!
மாலையில் தரும் மனமகிழ்ச்சி!
சோர்வில் தரும் !
மழையில் கிட்டும் தணதணப்பு!
அலுவலுக்கிடையேஆனந்தம்!
பயணத்தில் தருமே தனிசுகம்!
எழுத்தாளர்க்கு தரும் ஊக்கம்!
பேச்சாளரும் பெறுவர் ஆக்கம்!
உழைப்போர் பெறுவர்
உற்சாகம்!சுறுசுறுப்பு
மாணவர் விலக்குவர் உறக்கம்!
தினசரியில் செய்திகள் சூடாகும்!
அரசியல் பேச அவசியம் தேவை!
கடந்த வாழ்வை அசைபோட..
இன்றைய வாழ்வை சிறப்பாக்க..
எதிர்கால திட்டங்கள் போட..
அனைத்திலுமே வெற்றி கிட்ட
தேவையான நீர் சூடான தேநீர்!
மலைக்க வைக்கும் பணியை
மறக்கச் செய்யும் மந்திரம்!
காலை வேலை முடித்து
கணவரும் பிள்ளைகளும்
அவரவர் சென்றுவிட
இல்லத்து தாய்மார்கள்
ஆற அமர ருசித்து அருந்தும் இனிய சூடான தேநீர் நேரத்துக்கு இணையேது!
கருத்துகள்
கருத்துரையிடுக