காதலின் ஆழம் (சிறுகதை)(27.1.'21)
காதலின் ஆழம் (சிறுகதை)
சுதாகரின் கம்பெனிக்கு புதிதாக வேலைக்கு வந்த எழிலி பெயரைப் போன்றே அழகி! அவளைக் கண்டதும் காதலான சுதாகர் தன் ஆசையை சொல்ல, அப்பாவின் ஆழமான ஜாதிப் பற்று காரணமாக மறுத்து விட்டாள்.
சுதாகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க 'என்றும் நீதான் என் மனைவி. அப்பா மனதை மாற்ற முயற்சி செய்' என்றான். அப்பா சொன்ன பையனை மணந்தவளுக்கு அவன் தீய குணங்கள்
தெரியவர நிலைகுலைந்
தாள்.ஒருநாள் குடிபோதையில் வேறொரு பெண்ணுடன் வந்து விவாகரத்து கேட்டபோது சம்மதித்தாள்.
வேலையில் சேர்ந்து எல்லாம் மறக்க முயற்சித்தும் சுதாகரை மறக்க முடியவில்லை.அவள் பிறந்த நாட்களில் அவன் வாழ்த்து உற்சாகம் தரும். மனமாற்றத்திற்காக மாலுக்கு சென்றவளை 'எழில்' என அழைத்த சுதாகரின் குரல் கட்டி நிறுத்தியது. வாழ்த்து கூறியவன் அவள் வாழ்க்கை பற்றி அறிந்து 'உனக்காக காத்திருக்கும் என்னை மணப்பாயா?' என கைகளை நீட்ட, அவன் ஆழமான காதலை எண்ணிக் கண்கலங்கி தன் கைகளை அவனுடன் இணைத்துக் கொண்டாள்!
கருத்துகள்
கருத்துரையிடுக