'சோத்துக்குள்ள பூசணிக்காய்..வீட்டுக்குள்ள யானை'(19.2.'21)



இது கதையல்ல. அனுபவம்!

நான் தினமும் பதிவுகள் எழுதும்போது என் ஏழு வயது பேத்தி ப்ரியங்கா  'இன்னிக்கு என்ன கதை எழுதப் போற' என்பாள். நான் 'சோத்துக்குள்ள பூசணிக்காய்..வீட்டுக்குள்ள யானை' பற்றி கதை எழுதணும். அது பற்றி யோசிக்கிறேன்?' என்றேன். 

சற்று யோசித்தவள் 'இதை நான் ஈஸியா பண்ணுவேனே' என்றாள். 'எப்படி' என்றேன்! 

அவள் விளையாட்டு சாமான்களைக் கீழே எடுத்து வைத்து அதிலிருந்த ஒரு பெரிய சொப்பை எடுத்தாள். அதில் அவள் அம்மாவிடம் கேட்டு சாதத்தை எடுத்து வந்து போட்டாள். அவளிடமிருந்த பொம்மை பூசணியை அதனுள் வைத்தாள்! அடுத்து அவளிடமிருந்த பொம்மை வீட்டை எடுத்து அதனுள் குட்டி யானை ஒன்றை வைத்தாள்! 'பாட்டி! நீ சொன்னதை நான் பண்ணிட்டேன் பார்' என்றாள்!

அவளின் சமயோசித புத்தி என்னை ஆச்சரியப் படுத்தியது. அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டேன்😘

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு