வீசு தென்றலே (17.2.'21)


வசந்த காலத்தில் இசைந்து வீசும் தென்றல் காற்றே!

சில்லென்று வீசி மேனியை சிலிர்க்க வைக்கிறாய்!

சோலைக்குள் சென்று சுகந்தம்

தந்து சொக்க வைக்கிறாய்!

உழைப்போரின் உடல் தீண்டி 

களைப்பின்றி

குளிர்விக்கிறாய்!

மாலையில் மிதந்து வந்து என்

மோகத்தை மீட்டி விடுகிறாய்! 

புயலாய் மாறி மிரட்டி வீசி

புவனமே அலற வைக்கிறாய்!

கோபம் கொள்ளாதே தென்றலே! 

எங்கும் நிறைந்து மென்மையாய் வீசி

அசைந்தாடி அழகாய் வீசி வையம் 

செழித்திட எமை வாழ வைப்பாய் தென்றலே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு