தாலாட்டு(11.2.'21)


தாலாட்டு

அழகே! அன்பே! அற்புதமே! அருமை மகனே!

ஆனந்தம் தந்த அருட்சுடரே!

இப்பிறவியில் எமக்கு இன்பம் தந்த இன்னமுதே!

ஈடில்லா என்னருமை சித்திரமே!

உன்னைப் போல் ஒருபிள்ளை இங்கு நான் கண்டதில்லை!

உறவுக்கு பாலமாகி எமக்கு 

ஊட்டமளித்த பேரழகே!

எல்லையிலா பேரின்பத்தில் எமை ஆழ்த்திஏ ஏற்றம்தந்த என் செல்வமே!

ஐம்பொன் தந்தாலும் உனைப் போல் ஒரு பிள்ளை ஒருநாளும் காணேன் நான்!

ஓங்கி உயர்ந்து என்றும் ஔவியம் பேசாத அறிவார்ந்த என் மகனே! என்னருமை கண்மணியே!

இன்று பிறந்தநாள் காணும் நீ பொருளும் புகழும் பெற்றுபல்லாண்டு வாழ்க!வளர்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு